Home Tamil News Tamil Nadu News கே.பி.என். பஸ் நிறுவன அதிபர் வீட்டில் ரெய்டு!
  

Latest News:

கே.பி.என். பஸ் நிறுவன அதிபர் வீட்டில் ரெய்டு!

February 06, 2010 16:15:33

பிரபல பஸ் நிறுவனமான கேபிஎன் டிராவல்ஸ் உரிமையாளர் நடராஜன் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.


நடிகர்கள், தொழில் அதிபர்கள், அரசு அலுவலர்கள் என பலரது வீடுகளிலும் வருமான வரித்துறை சமீப காலமாக தொடர் சோதனைகள் நடத்தி வருகிறது. 

தமிழகத்தின் தனியார் பஸ் நிறுவனங்களில் முக்கியமானது சேலம் கேபிஎன் டிராவல்ஸ். ஏராளமான பஸ்கள் ஆம்னி சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தின் சேலம் அலுவலகம், உரிமையாளர் நடராஜன் வீடு, பெட்ரோல் பங்குகள், டிராவல்ஸ் அலுவலகங்கள் என பல இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

வருமான வரித்துறை துணை இயக்குனர் கருப்பச்சாமி தலைமையில் இந்த அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. 
 

Related TamilNadu News:

I Need Not Resign For CBI Raid: Raja

சூர்யா வீடுகளில் எதற்காக ரெய்டு?
நடிகர்கள் சூர்யா, வடிவேலு, விஜயகுமார் வீடுகளில் அதிரடி சோதனை!!