Home Tamil News Sports News தீபிகா படுகோன் நடனத்துடன் துவங்கும் ஐபிஎல் போட்டிகள்!
Illinois Institute Of Technology
  

Latest News:

தீபிகா படுகோன் நடனத்துடன் துவங்கும் ஐபிஎல் போட்டிகள்!

March 10, 2010 21:03:45

மும்பை: பாலிவுட் டாப் ஹீரோயின் தீபிகா படுகோனின் கலக்கல் நடனத்துடன் துவங்குகிறது கமர்ஷியல் கிரிக்கெட்டான 3 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்.

நாளை மறுநாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பால்வுட் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

3வது ஐபிஎல் தொடர் வருகிற 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

மும்பை, மொகாலி, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, கட்டாக், நாக்பூர், ஜெய்ப்பூர் தர்ம சாலா ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இதற்கான தொடக்க விழா 12ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பையில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.  

பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். சிறப்பு நிகழ்ச்சியாக நடிகை தீபிகா படுகோனின் கவர்ச்சிகரமான நடனமும் மிக முக்கியமாக இடம் பெறவுள்ளது.



Related Sports News:


ஐபிஎல் போட்டிகளுக்கு ரூ 250 கோடி இன்சூரன்ஸ்
Kalaignar Invites Deepika Padukone
Deepika Padukone At The Maxim 100 Photo Gallery