Home Tamil News Sports News ஐபிஎல் இன்று கோலாகல துவக்கம்!
Illinois Institute Of Technology
  

Latest News:

ஐபிஎல் இன்று கோலாகல துவக்கம்!

March 12, 2010 11:38:54

மும்பை: கிரிக்கெட் போட்டிகளை லாபம் கொழிக்கும் வர்த்தக சமாச்சாரமாக மாற்றிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்குகின்றன.


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடத்தும் 3-வது ஆண்டு டுவென்டி20 கிரிக்கெட் போட்டி இது.

மார்ச் 12-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. 

நாட்டில் பல முக்கிய நகரங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த முறை நடந்த ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

போட்டி நடைபெறும் இடங்கள்: நவி மும்பை, மும்பை, மொஹாலி, கொல்கத்தா, சென்னை, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, நாகபுரி, ஜெய்ப்பூர், தர்மசாலா ஆகிய இடங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பங்கேற்கும் அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். 

முதல் நாள் போட்டி நவி மும்பையில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. தினமும் இரவு 8 மணிக்கு இப்போட்டி நடத்தப்படுகிறது. ஒருசில நாட்களில் இரண்டு போட்டிகள் அதாவது மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி கேப்டனாக உள்ளார். மும்பை இண்டியன்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்டும், டெல்லி டேர்டெவில்ஸுக்கு காம்பீரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இலங்கை வீரர் சங்ககராவும், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஷேர்ன் வார்னேவும், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு இந்திய சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவும் அணித் தலைவர்களாக உள்ளனர்.

ஐபிஎல் நடத்திய முதல் போட்டியில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்டம் வென்றது. இரண்டாவது ஆண்டு போட்டியில் கில் கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றிபெற்றது.


Related Sports News:


தீபிகா படுகோன் நடனத்துடன் துவங்கும் ஐபிஎல் போட்டிகள்!
ஐபிஎல் போட்டிகளுக்கு ரூ 250 கோடி இன்சூரன்ஸ்
ஐபிஎல் போட்டிகளே எங்களுக்கு வேண்டாம்! - பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி