தென்னாப்பிரிக்கவுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று நடந்தது.
கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன், பெங்கால் விக்கெட் கீப்பர் விரித்திமான் ஷா மற்றும் தமிழக வீரர் பத்ரி நாத் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளனர். காயம் காரணமாக யுவராஜ்சிங், டிராவிட், ஸ்ரீசந்த் ஆகியோர் இடம் பெறவில்லை.
இந்திய அணி விவரம் வருமாறு:
டோனி (கேப்டன்), சேவாக், காம்பீர், பத்ரிநாத், தெண்டுல்கர், லஷ்மண், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், மிஸ்ரா, ஓஜா, இசாந்த் சர்மா, முரளி விஜய், சுதீப் தியாகி, அபிமன்யு மிதுன், விரித்திமான் ஷா.
Related Sports News:
சாம்பியன் கோப்பை கிரிக்கெட்-இந்திய அணி தென்ஆப்ரிக்கா பயணம்சாம்பியன் டிராபி இன்று தொடக்கம்-இலங்கை-தென் ஆப்ரிக்கா பலப்பரீடசை
சாம்பியன் டிராபி-3வது போட்டியில் நியூலாந்து வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி