Home Tamil News Sports News 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
Illinois Institute Of Technology
  

Latest News:

113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

January 21, 2010 15:44:39

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.


சிட்டகாங்கில் இந்தப் போட்டி நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 243 ரன்னும், வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 242ரன்னும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 8விக்கெட் இழப்புக்கு 413ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 415 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
415 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 67ரன் எடுத்து இருந்தது.  
 
இன்று (வியாழக்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பனி காரணமாக ஆட்டம் 1மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
 
தோல்வியை தவிர்க்க மேலும் 348ரன் தேவை. கைவசம் 8விக்கெட் என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து ஆடியது.
 
இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சால் அந்த அணி திணறியது.  இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியால் அவுட்டாகி வெளியேறினர் வங்கதேச வீரர்கள்.

இதனால்  வங்கதேசம் 301 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.   இதனால் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

2-டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.

Related Sports News:

இந்தியா 418/8 டிக்ளேர்!
முத்தரப்பு போட்டி: வங்கதேசம் - இந்தியா மோதல்
விராட் கோஹ்லி சதம்; வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!