தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கள் 200 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனை நிகழ்த்தினார்.
40 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினின் இந்த ஸ்கோர்தான் அதிகபட்சமானது. 147 பந்துகளில் இந்த இமாலாய சாதனையை நிகழ்த்தினார் டெண்டுல்கர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 401 ரன்கள் குவித்தது.
கேப்டன் டோனி 35 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். தினேஷ் கார்த்திக் 79 ரன்களும், யூசுப் பதான் 36 ரன்களும், ஷேவாக் 9 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவரில் 248 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா, இந்த வெற்றி மூலம் உலகின் பலமிக்க அணிகளுள் 2-வது இடத்தை வகிக்கிறது.
Related Sports News:
Sachin's Records Are Unbeatable:
Pontingசச்சின்.. சாதனை மேல் சாதனை!
சசசின் 44வது சதம் விளாசல்-கோப்பையை
வென்றது இந்தியா