இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி இன்று இலங்கையில்
உள்ள சிங்கள மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் யுவராஜ் சிங்
மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா மற்றும்
முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காலேயில் நடந்த முதல் போட்டியில் தோற்றிருக்கும் நிலையில் 2 ஆவது
டெஸ்டில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
பந்துவீச்சு பலவீனமாக இருக்கும் நிலையில் பேட்ஸ்மேன்களும் அதிக ரன்கள்
எடுக்காமல் சீக்கிரமே வெளியேறி வருவதும் பலவீனமாக இருக்கிறது.
முதல் டெஸ்டில் சோபிக்காத யவுராஜ் சிங்கும், கவுதம் காம்பீரும்
நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னாவும், தமிழக வீரர் முரளி விஜய்யும்
இந்தப் போட்டியில் விளையாட உள்ளனர்.
இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் இளம்வீரர்
அஜந்தா மெண்டிஸ் உள்ளே வந்திருக்கிறார். காயம் காரணமாக வேகப்பந்து
வீச்சாளர் மலிங்கா விளையாடவில்லை. முரளிதரன், மலிங்கா ஆகியோர் இல்லாத
சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக்கொண்டு இந்தப்போட்டியை வெற்றிபெற்றாக
வேண்டும்.
இலங்கை வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி தொடரை வெல்வதுடன், டெஸ்ட்
போட்டியில் முதலிடம் என்ற இடத்தை இந்திய அணி இழக்க நேரிடும். அத்துடன்
கடந்த 17 வருடங்களாக இலங்கையில் இந்திய அணி தொடரை வென்றது இல்லை என்ற நிலை
தொடரும்.
-சிவாஜி டிவி
Related Sports News:
Sri
Lanka win by ten wickets - Latest Cricket News
Muralitharan
800th wicket in farewell Test - Sports News in Tamil
Lack of bowling strength gave defeat : Dhoni - Latest Sports News