Home Tamil News Sports News டிராவை நோக்கி இந்தியா - இலங்கை 2 வது டெஸ்ட்!
  

Latest News:

டிராவை நோக்கி இந்தியா - இலங்கை 2 வது டெஸ்ட்!

July 29, 2010 17:23:15
இந்தியா - இலங்கை இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இலங்கை சிங்கள ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா - இலங்கை இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 669 ரன்கள் குவித்துள்ளது. இது இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 642 யை விட 28 ரன்கள் அதிகமாகும். இஷாந்த் சர்மா 10 ரன்களுடனும், ப்ரக்யான் ஓஜா ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இன்று ரெய்னா 120, சச்சின் டெண்டுல்கர் 203, கேப்டன் தோனி 76, ஹர்பஜன் 0, அபிமன்யு மீதுன் 41 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

நான்கு நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளிலும் முதல் இன்னிங்ஸ் மட்டுமே ஆடப்பட்டிருக்கிறது. கடைசி நாளான நாளை கடைசி விக்கெட்டுடன் இந்திய அணி ஆடத் தொடங்கும். அதன் பிறகு இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கும். இந்தியாவுக்கும் இரண்டாவது இன்னிங்ஸ் பாக்கியுள்ளது.

கடைசிநாளான நாளை மாற்றம் எதுவும் நேர வாய்ப்பில்லை. எனவே 2 ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே நிறைய வாய்ப்பிருக்கிறது.

-சிவாஜி டிவி


Related Sports News:

Sachin reaches fifth double ton - Latest Sports News
Raina hits century on debut - Sports News in Tamil
Sachin Tendulkar hits 48th Test ton - Sports News