Home Tamil News International News இந்தியா - கனடா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து
  

Latest News:

இந்தியா - கனடா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

June 28, 2010 11:26:03
இந்தியா - கனடா இடையே அணுசக்தி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்தியா - கனடா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு நாட்டு பிரதமர்களும் எந்த ரூபத்திலும் தீவிரவாதம் தலையிடுப்பதை எதிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஐகே.குஜ்ராலின் அரசுமுறைப் பயணத்திற்குப் பிறகு, 16 ஆண்டுகள் கழித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அரசுமுறைப் பயணமாக கனடா சென்றிருக்கிறார். இருநாட்டு அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மன்மோகன் சிங் - கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இருநாடுகளுக்கும் இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்கள் பயன்பாட்டிற்கான இந்த ஒப்பந்தம் மூலம் யூரேனியம் மற்றும் அணுசக்தி தொடர்பான கருவிகளை கனடாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துகொள்ளலாம்.

இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில், இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையில், இந்திய அணுசக்தி துறை செயலாளர் ஸ்ரீகுமார் பானர்ஜி, கடனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ஸ் கெனான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1974 மற்றும் 1998 இல் போக்ரானில் அணு சக்தி சோதனை நடத்தியப் பிறகு இந்தியாவிற்கு அணுசக்தி தொடர்பான உதவிகளை செய்ய கனடா மறுத்துவிட்டது. அதன்பிறகு தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தில் அணுக்கழிவு மேலாண்மை மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்தும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா - கனடா இடையிலான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த இருநாடுகளும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் எனத் தெரிகிறது.

-சிவாஜி டிவி

Related International News:

Obama praises Manmohan Singh speech - International News
Protesters at G-20 summit, follows Gandhi
Manmohan Singh flies Canada for G-20 meet - National Tamil News