Home Tamil News Tamil Nadu News ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்


Illinois Institute Of Technology

Latest News:

ஈழத் தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

January 29, 2010 14:37:01

ஈழத்தமிழருக்காக தன் உயிரை தானே தீயில் மாய்த்துக் கொண்ட முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (29.01.2010) தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது.


இதனையொட்டி தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

ஈரோட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு திறந்தவெளி கருத்தரங்கம் நேற்று (28.01.2010) மாலை நடத்தப்பட்டது.

தஞ்சையில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவாக, தெருமுனைக் கூட்டம்  சுடரோட்டம் கருத்தரங்கம் ஆகியவை இன்று (29.01.2010) நடத்தப்படுகின்றது.

கருத்தரங்கை ஒட்டி இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில், பள்ளியக்கிரகாரத்திலிருந்து, முத்துக்குமார் நினைவுச் சுடரோட்டம நடத்தப்படுகின்றது. மாலை 6 மணியளவில் ஆப்ரகாம் சாலையில், கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்குகிறார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் புலவர் கோ.நாகேந்திரன் பாவீச்சு நிகழ்த்துகிறார். ஈழத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், முத்துக்குமாரின் இறுதி அறிக்கையும் தமிழ்த்தேசியமும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
 
பரமக்குடியில் இன்று கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். 

முத்துக்குமார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது.

01.02.2010 அன்று மாலை ஆத்தூர் கடைத்தெருவில் நடக்கும் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினது ச.தமிழ்மணி தலைமை தாங்குகிறார். கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
 
சென்னை தாம்பரத்தில் 13.02.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.

கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களிலும் முத்துக்குமாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

Related TamilNadu News
:

முத்துக்குமார் நினைவு நாள் இனி வீர வணக்க நாள்! - பழ நெடுமாறன்
Independence day Special- Na. Muthukumar Interview