Home Tamil News Entertainment News துபையில் கணவர் கொடுமைப்படுத்தினார்: காவ்யா மாதவன்
  

Latest News:

துபையில் கணவர் கொடுமைப்படுத்தினார்: காவ்யா மாதவன்

July 25, 2010 13:26:36
ணவர் நிஷால் என்னை துபையில் கொடுமைப்படுத்தினார் என்று நடிகை காவ்யா மாதவன் புகார் கூறியுள்ளார்.
 
காசி, என் மனவானில், சாது மிரண்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை காவ்யா மாதவன். 

இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிஷால் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் திருமணத்துக்கு பிறகு நிஷாலும், காவ்யா மாதவனும் குவைத்தில் குடியேறினர்.

திருமணம் முடிந்து 5 மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை பிரிந்து காவ்யா மாதவன் மீண்டும் கொச்சிக்கு வந்தார். சினிமாவிலும் நடிக்க தொடங்கினார்.
 
இந்த நிலையில் தன்னையும், தனது குடும்பத்தினர் பற்றியும் காவ்யா மாதவன் அவதூறாக பேசி வருகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி காவ்யா மாதவனுக்கு நிஷால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
 
கணவர் நோட்டீசு அனுப்பிய நிலையில் காவ்யா மாதவன் விவகாரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
 
மேலும் எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார். அதில் நிஷால் சந்திராவும், அவருடைய குடும்பத்தினரும் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். குவைத்தில் தனிக்குடித்தனம் நடத்தியபோதும் இந்த கொடுமை தொடர்ந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

 காவ்யா மாதவன் விவகாரம் கேரள திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Entertainment News:

Radio Mirchi Music 2010 Awards Gallery, Vijay at Mirchi Music Awards Stills
Actress Gopika Wedding Reception Photos
Gopika gives birth to female child