Home Tamil News Sports News ஹாக்கி: பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா
  

Latest News:

ஹாக்கி: பெல்ஜியத்தை வீழ்த்தியது இந்தியா

July 18, 2010 10:31:58

பெல்ஜியத்துக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி தொடரை (2-0) கைப்பற்றியது.
  இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஹாக்கி தொடர் பெல்ஜியததின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது இந்த போட்டியின் முதல் ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.
 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வெற்றி கொண்டது. இந்நிலையில் தொடரின் இறுதி ஆட்டம் பரபரப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சந்தீப் சிங் 2 கோல்களையும், தனிஷ் முஜ்தபா, தனஞ்செய் மஹாதிக், துஷ்கர் கந்தகர் சர்வன்ஜித் ஆகியோர் தலா ஒரு கோலும் போட்டனர். முதல் கோலை ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் சந்தீப் போட்டார். இந்த ஆட்டத்தின் போது பெல்ஜியத்துக்கு 8  பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்த போதும் அவை அனைத்தையும் இந்திய கோல் கீப்பரும், வீரர்களும் திறமையாக கையாண்டு பெல்ஜியத்தை கோல் போட விடாமல் தடுத்து விட்டனர்.
 ஆட்டத்தின் முதல் கோலை 18-வது நிமிடத்தில் போட்ட சந்தீப் 70-வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டார். இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தால் பெல்ஜியம் அணியை ஓரு கோல் கூட போட விடாமல் திணறடித்தது. இறுதியில் 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக பாரீஸில் நடைபெறும் பிரான்ஸ் அணிக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட 
உள்ளது இந்திய ஹாக்கி அணி.

Related Sports News:

India struggling to enter semi finals in world cup hockey
India - Australia match today
India And Pakistan Pitted Together In Hockey World Cup