Home Tamil News National News பட்ஜெட் 2010: ஹைலைட்ஸ்
Illinois Institute Of Technology
  

Latest News:

பட்ஜெட் 2010: ஹைலைட்ஸ்

February 26, 2010 20:52:04

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து வரும் பட்ஜெட்  உரையின் முக்கிய அம்சங்கள்:


-டிராக்டர்கள், மொபைல் போன்கள், சிமென்ட் ஆகியவற்றுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலையும் உயருகிறது.

-ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிப்பு

-ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட்

-கூடுதலாக பல சேவைகளுக்கும் வரிகள் விதிக்கப்படும்

-விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு

(பட்ஜெட்டுக்கு இந்திய பங்குச் சந்தையில் வரவேற்பு, பங்கு விலைகள் உயர்வு)

-டிவி, ஃபிரிட்ஜ், ஏசி விலையும் உயருகிறது 

-தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.

-மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து 

-சிடி விலை குறையும் 

-பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீது மீணடும் 5 சதவீத கலால் வரி 

-இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 கிராமுக்கு ரூ. 300 சுங்க வரி விதிக்கப்படும். இதனால் தங்க நகை விலை உயரும்.

-அதிகபட்ச சுங்க வரி 10 சதவீதமாக இருக்கும்

-பெட்ரோல், டீசல் விலை உயரும் 

-பெரிய கார்களுக்கு சுங்க வரி 22 சதவீதமாக உயர்வு

-(பெட்ரோலிய பொருட்கள் மீதான கூடுதல் வரியை கண்டித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு)

--பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்க வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு (இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கும். இதை கண்டித்து எதி்ர்க் கட்சிகள் அமளி)

-கலால் வரி 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு

-கார்பரேட் நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி குறைப்பு

-சிகரெட் மீதான சுங்க வரி அதிகரிப்பு

-இந்த வருமான வரி சலுகையால் ரூ. 26,000 கோடி இழப்பு ஏற்படும்

-நீண்டகால அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ. 20,000 முதலீடு செய்தால் வரி சலுகை கிடைக்கும்

-இந்த புதிய வருமான வரி சலுகை மூலம் 60 சதவீத வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர்.

-ஆண்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு முழு வருமான வரி விலக்கு தொடரும்

-ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10 சதவீதமாக இருக்கும். (இதுவரை ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வருமான வரி இருந்தது.)

-ரூ. 5 லட்சத்தி்ல் இருந்து 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதம்

-ரூ. 8 லட்சத்துக்கு மேல் வருட வருமானம் உள்ளவர்களுக்கு வரி 30 சதவீதமாக தொடரும்

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,000 கோடி அதிகரிப்பு

-உணவுப் பற்றாக்குறையை தனியார் துறை உதவியோடு வெல்வோம்

-பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

-ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை திட்டத்துக்கு ரூ. 1900 கோடி 

-இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது

-திட்ட செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது

-மொத்த வரி வருமானம் ரூ. 7.46 லட்சம் கோடியாக இருக்கும்

-பெண் விவசாயிகள் நலத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 2600 கோடி 

-ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை.

-ரூ. 1000 கோடியில் அங்கீகரிக்கப்படாத தொழில் பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு  நிதியம். 

-ஊரக வளர்ச்சிக்கு ரூ. 66,000 கோடி ஒதுக்கீடு 

-குறைந்த விலை வீடுகளுக்கான மானியம் நீட்டிப்பு. குடிசையில்லா நகர்களை உருவாக்க திட்டம்

-மகளிர், குழந்தைகள் நலனுக்கு ரூ.22,300 கோடி 

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு 'ஸ்மார்ட் கார்ட்'

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டம்

-மகளிர், குழந்தைகள் நலனுக்கான நிதி 50 சதவீதம் அதிகரிப்பு

-நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஏழைகள் நலனுக்கு ரூ. 5,400 கோடி

-இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி 

-புந்தல்கந்த் வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 1200 கோடி நிதியுதவி 

-2000 மக்கள் தொகை கொண்ட எல்லா கிராமங்களிலும் வஙகிகள் திறக்கப்படும்

-பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி 

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 40,100 கோடி ஒதுக்கீடு

-பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கு ரூ. 31600 கோடி 

-சுகாதாரத் துறை திட்டங்களுக்கு ரூ. 22,300 கோடி 

-இப்போதைய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது

-2022ம் ஆண்டில் 20,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம்

-ஊரக வளர்ச்சிக்கான நிதி 25 சதவீதம் அதிகரிப்பு

-உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா தயார்

-மின் சக்தித் துறைக்கு ரூ. 5130 கோடி

-சாலை கட்டமைப்பு வசதியைப் பெருக்க ரூ. 19894 கோடி

-அடிப்படைக் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு ரூ. 1.73 லட்சம் கோடி

-மரபு சாரா எரிசக்தித் திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு.

-தேசிய மாசு இல்லா எரிபொருள் நிதியம் அமைக்கப்படும்

-விவசாயக் கடன்களுக்கு 2 சதவீத மானியம்

-திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.200 கோடி

-வங்கித் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை

-சில்லறை வர்த்தகம்  தொடர்பான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

-2011ம் ஆண்டில் ரூ. 3.75 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு.

-5 மாபெரும் உணவுப் பூங்காங்கள் அமைக்கப்படும்

-தினந்தோறும் 20 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்

-அதிக பொருளாதார மண்டலங்கள் அமைக்க திட்டம்

-நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்கு 13 சதவீத கூடுதல் நிதி

-வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

-வட கிழக்கில் விவசாயத்துறையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியுதவி

-ஏற்றுமதியை ஊக்குவிக்க 2 சதவீத வரி சலுகை நீட்டிப்பு

-அரசு வங்கிகள் விவசாய கடன்களை அதிக அளவில் அளித்து வருகின்றன

-ஊரக வங்கிகளை மேலும் ஸ்திரப்படுத்த கூடுதல் நிதி

-விவசாய வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டம்

-அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 16,000 கோடி உதவி

-பெட்ரோலிய விலைகள் குறித்த பாரிக் கமிட்டி பரிந்துரையை அமலாக்க யோசனை

-2 மாதங்களில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்

-வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை மேலும் எளிமையாக்கப்படும்.

-மேலும் அதிக தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ்கள் தரப்படும்

-சமூக பொருளாதார திட்டங்களுக்கு அதிக நிதி

-தனியார் முதலீடுகளால் 9 சதவீத வளர்ச்சி நிச்சயம் சாத்தியம்

-நேரடி வரிகள் தொடர்பாக ஏப்ரல் 1ம் தேதி முதல் புது திட்டம்

-உரங்கள் மீதான மானியம் குறைக்கப்படும்

-இந்த ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ரூ. 25,000 கோடி அரசு முதலீட்டை வாபஸ் பெற இலக்கு

-விரைவில் 10 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்

-அரசுச் செலவீனங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

-இரண்டு இலக்க பணவீக்கம் பெரும் கவலையளிக்கிறது

-உலக பொருளாதார சிக்கலால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சலுகைளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது

-உற்பத்தித்துறை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது

-பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம்-விலைவாசி உயர்ந்தது

-உலக பொருளாதார சிக்கலை இந்தியா திறம்பட சமாளித்தது

-உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முயற்சி

-ஊரக அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

-அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே முக்கிய இலக்கு

-8 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட பொருளாதாரம் சிறப்பாக உள்ளது

-தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் உணவு உற்பத்தி பாதிப்பு

-கடந்த பட்ஜெட்டின்போது பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் முன்னேறியுள்ளது


Related National News:

இன்று ரெயில்வே பட்ஜெட்... பயணிகள் கட்டணம் உயராது என மம்தா அறிவிப்பு
Chidambaram Speaks On The Budget Highlights
Union Budget 2009: Pranab Mukherjee