Home Tamil News Entertainment News அஜீத் மேலாளரைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
Illinois Institute Of Technology
  

Latest News:

அஜீத் மேலாளரைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

March 04, 2010 19:30:21

சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் வீடு தாக்கப்பட்ட வழக்கில் அஜீத் மேலாளர் சுரேஷ் சந்திராவை கைது செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இது தொடர்பாக ஜாகுவார் தங்கம் போட்ட ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஜாகுவார் தங்கம் வீட்டை அஜீத் ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாகவும், இதில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நேரடியாக ஈடுபட்டார் என்றும் புகார் தரப்பட்டது. ஆனால் போலீசார் சுரேஷ் சந்திராவைக் கைது செய்யவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஜாகுவார், சுரேஷ் சந்திராவையும் அஜீத்தையும் கைது செய்ய போலீசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுரேஷ் சந்திராவை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று இரு வாரங்களில் பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Entertainment News:

அஜீத் மீது சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் புகார்

ரஜினி - அஜீத் ரசிகர்கள் கல்வீசியதாக சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் புகார்
அஜீத் பிரச்சினையை ஜாதி அரசியலாக்கும் ஜாகுவார் தங்கம்!