இன்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ. 216 குறைந்துள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பு பவுன் விலை ரூ. 13 ஆயிரத்து 500-ஐ தாண்டி இருந்தது. அதன் பிறகு விலை குறைந்தது. ரூ. 12 ஆயிரத்து 500 அளவுக்கு வந்தது. சமீப காலமாக விலை சற்று உயர்வதும், குறைவதுமாக இருக்கிறது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 12 ஆயிரத்து 624-க்கு விற்றது. இன்று ஒரே நாளில் ரூ. 216 குறைந்து ரூ. 12 ஆயிரத்து 408-க்கு விற்றது. சமீப காலத்தில் இன்றுதான் ஒரே நாளில் இந்த அளவுக்கு விலை குறைந்து உள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 1551 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 16 ஆயிரத்து 750க்கு விற்றது.
பார் வெள்ளி இன்று ரூ. 28 ஆயிரத்து 550 ஆகவும், 1 கிராம் 30 ரூபாய் 50 காசாகவும் இருந்தன
Related TamilNadu News:
தங்கம் இன்று 'வரலாறு காணாத' உயர்வு!தங்கம் விலை ரூ.272 குறைந்தது!தங்கம் விலை ஒரே நாளில் 152 அதிகரிப்பு!