Home Tamil News National News தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்தது!


Illinois Institute Of Technology

Latest News:

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்தது!

January 23, 2010 10:49:56

சென்னை: தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவு நிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்தது.

 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக  தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.1,551-க்கும், பவுன் 12 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. அதாவது ஒரு கிராம் ரூ.1,513-க்கும், ஒரு பவுன் 12 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. 

கடந்த 2 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது (அப்படியும் இந்த பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காத வகையில் சில கடைகளில் செய்கூலி, சேதாரத்தை அதிகப்படுத்தியுள்ளதாகப் புகார்கள் வருகின்றன) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் (தை மாதம்) திருமண முகூர்த்தங்கள் மிகுந்த மாதம் ஆகும். இந்த நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
"அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து உள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தோர் தற்போது பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுவே தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும்" என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related National News:

தங்கம் விலை ரூ 216 குறைந்தது!
தங்கம் விலை ஒரே நாளில் 152 அதிகரிப்பு!
தங்கம் விலை ரூ.272 குறைந்தது!