Home Tamil News Sports News ஐசிசி ரேங்க்...கம்பீர் தொடர்ந்து முதலிடம்
Illinois Institute Of Technology
  

Latest News:

ஐசிசி ரேங்க்...கம்பீர் தொடர்ந்து முதலிடம்

January 23, 2010 20:25:48
ஐசிசி டெஸ்ட் ரேங்க் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார் இந்தியாவின் கவுதம் கம்பீர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி பேட்டிங்கில் இந்திய வீரர் கவுதம் காம்பீர் 881புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதம் அடித்து முதலிடம் வகிப்பவர் அவர்.
 
ஷேவாக் 799 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளார். வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததால் தெண்டுல்கர் 15-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கும், லட்சுமண் 17-வது இடத்தில் இருந்து 15-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
 
14-வது இடத்தில் இருந்த டிராவிட் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
தென்ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் 2-வது இடத்திலும், ஜெயவர்த்தனே (இலங்கை) 3-வது இடத்திலும், சங்ககரா (இலங்கை) 4-வது இடத்திலும், மைக்கேல் கிளார்க் (ஆஸ்தி ரேலியா) 5-வது இடத்திலும் உள்ளனர்.
 
பவுலர்களில் டாப்10ல் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்று உள்ளார். ஹர்பஜன்சிங் 705 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளார்.
 
இஷாந்த் சர்மா, அமித்மிஸ்ரா ஆகியோர் முன்னேற்றம் அடைந்து உள்ளனர். இஷாந்த் சர்மா 9 இடங்கள் முன்னேறி 16-வது இடத்திலும், அமித் மிஸ்ரா 10 இடங்கள் முன்னேறி 45-வது இடத்திலும் உள்ளனர்.
 
தென்ஆப்பிரிக்க வேகப் பந்து வீரர் ஸ்டெய்ன் 852 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மைக்கேல் ஜான் சன் (ஆஸ்திரேலியா) 2-வது இடத்திலும், முகமது ஆசிப் (பாகிஸ்தான்) 3-வது இடத்திலும் உள்ளனர்.
 
ஆல் ரவுண்டர் தரவரி சையில் ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), வெட்டோரி (நியூசிலாந்து) சுவான் (இங்கிலாந்து) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
 
நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 124 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
 
இலங்கை, இங்கிலாந்த, நியூசிலாந்து, ,பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் ஆகிய நாடுகள் முறையே 4 முதல் 9-வது இடங்களில் உள்ளன.

Related Sports News:

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்...அடுத்த சீஸன் ஆரம்பம்...
சாம்பியன் கோப்பை கிரிக்கெட்-இந்திய அணி தென்ஆப்ரிக்கா பயணம்
சாம்பியன் டிராபி இன்று தொடக்கம்-இலங்கை-தென் ஆப்ரிக்கா பலப்பரீடசை