Home Tamil News National News போலிச்சாமியார்களுக்கு மரண தண்டனை! - ராம்தேவ்
Illinois Institute Of Technology
  

Latest News:

போலிச்சாமியார்களுக்கு மரண தண்டனை! - ராம்தேவ்

March 10, 2010 13:56:12

சிம்லா: போலிச்சாமியார்களுக்கு மரண தண்டனை தரவேண்டும் என்கிறார் யோகா குருவான ராம்தேவ் பாபா. 

யார் இந்த ராம்தேவ் பாபா?
பக்கத்தில் உள்ள படத்தில் ஷில்பா ஷெட்டிக்கு ஆசீர்வாதம் கொடுக்கிறாரே... அவர்தான்!


சிம்லாவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நாட்டில் ஏராளமான சாமியார்கள் மோசடி செயல்களில் சிக்கி அவர்கள் மீது பெருமளவில் வழக்குகள் தொடரப்படுவது பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. மதம், கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை மோசடி செய்யும் செயல் இது.

குறிப்பாக பாலியல் புகார்களுக்கு ஆளாகும், நிதி முறைகேடுகளில் சிக்கும் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 

இதுபோன்ற தவறுகளைத் தடுக்க, சாமியாராவதற்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும். 

தவறு செய்யும் சாமியார்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார் ராம் தேவ்.


Related National News:

சாமியார்களைக் கண்காணிக்க தனி குழு அமைக்க ராம கோபாலன் கோரிக்கை!
மார்ச் 18-ம் தேதி நித்யானந்தா வருவார்!'
நித்யானந்தம் மீது தமிழகம் - கர்நாடகத்தில் வழக்குகள் பதிவு!