Home Tamil News Sri Lanka News ராஜபக்சேவைக் கொல்ல திட்டமிட்டார் பொன்சேகா! - இலங்கை அரசு
Illinois Institute Of Technology
  

Latest News:

ராஜபக்சேவைக் கொல்ல திட்டமிட்டார் பொன்சேகா! - இலங்கை அரசு

January 28, 2010 21:13:17

கொழும்பு: ராஜபக்சேவையும், அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் சரத் பொன்சேகா என்று இங்கை பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பான புகாரை இன்று தெரிவித்துள்ளது.


இதனை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அரசின் தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹலுகலே இன்று மாலை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகியிருப்பது, அதுவும் அரசே கூறியிருப்பதன் மூலம் பொன்சேகாவுக்கு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.

லட்சுமண் ஹலுகலே மேலும் கூறுககையில்,

"அப்போது அவர் கூறுகையில், அதிபரையும், அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு தீர்த்துக் கட்ட முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகா திட்டமிட்டிருந்தார். இந்த சதித் திட்டத்தை கொழும்பில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் வைத்துத் தீட்டியுள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.

கோட்டையில் உள்ள, லேக் ஹவுஸ் சந்திப்பு அல்லது கொழும்பு காலே சாலை ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து அதிபரைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

இந்த சதித் திட்டத்தில் ராணுவத்தை விட்டு ஓடிப் போன 9 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களைத்தான் நேற்று ராணுவத்தினர், பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலில் வைத்துக் கைது செய்தனர்.

இந்த பயங்கர சதித் திட்டம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்படுவர்" என்றார் ஹலுகலே.

ராஜபக்சே தன்னைக் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக நேற்று காலையில்தான பொன்சேகா கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை, பொன்சேகாதான், ராஜபக்சேவை கூண்டோடு கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Srilanka News
:

'என்னை கொல்ல சதி..' - ஓட்டலில் முடக்கப்பட்ட பொன்சேகா
Raja Pakse Seeks Peace With Sarath Fonseka
ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராகிறார்!
Comments
  • Posted by  aaqil
    2010-01-29 21:56
    'என்னை கொல்ல சதி..' - ஓட்டலில் முடக்கப்பட்ட பொன்சேகா இது தான் உன்மைங்க‌