Home Tamil News National News மூடுபனி: விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு!
  

Latest News:

மூடுபனி: விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு!

January 24, 2010 17:08:31

டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும்பனி மூட்டம் நிலவுவதால், உள்நாட்டு - வெளிநாட்டு விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


பனி காரணமாக கடந்த ஒரு மாதமாக டெல்லியில் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
 
இன்றும் டெல்லியில் அதிகாலையில் பனிமூட்டம் கடுமையாக இருந்தது. 100 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை எதிரில் வரும் வாகனங்கள் எதுவும் தெரியவில்லை. விமான நிலைய ஒருபாதையும் பனிமூடிக் கிடந்தது.
 
இதனால் 50 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. டெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டிய சண்டிகார், பெங்களூர், அவுரங்கா பாத், மும்பை உள்பட 12 ஊர்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
 
சென்னையிலும் பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டன.

Related National News:

கடும் பனி மூட்டம்-மலைக்கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பனிமூடிய டெல்லி... பறக்காத விமானங்கள்!
உத்தரப்பிரதேசத்தில் ரயில்கள் மோதல், மூவர் பலி