டெல்லி: என்.டி. திவாரி ராஜிநாமா செய்ததையடுத்து, சத்தீஸ்கர் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் கூடுதலாக ஆந்திர ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழா நாளை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இத்தகவல் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் என்.டி. திவாரி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புலனாய்வு பிரிவு ( இன்டலிஜன்ட் பீரோ ) தலைமை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நரசிம்மன். ஆந்திராவில் நக்சலைட்டுகள் உள்ள பகுதியில் ஐ.பி.எஸ்., அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
Related National News:
ஜார்கண்ட் முதல்வராக ஷிபுசோரன் டிச 30-ம் தேதி பதவி ஏற்பு
என் டி திவாரி ராஜினாமா... காங்கிரஸ் வரவேற்பு!
செக்ஸ் புகார் எதிரொலி; ஆந்திர கவர்னர் நீக்கம்?