சமீபத்தில் மும்பையில் நடந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பின்போது ரசிகர்கள் சிலர் ஆர்வத்தில் செல்போன் மூலமாகவே கிளிக் செய்து வந்த படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா ராயுடன் மும்பை ஷாப்பிங் மால் எதிரே ரஜினி நடப்பது, காரின் மேல் கால்வைத்தபடி பேசுவது போன்ற காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன.
இந்தப் படப்பிடிப்பின்போது ரஜினியை ரசிகர்கள் பலர் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களிடம் ரஜினியும் சில நிமிடங்கள் செலவிட்டுப் பேசி நலம்விசாரித்து அனுப்பியுள்ளார்.
புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ரசிகர்களை சமாதனப்படுத்திய ரஜினி, பின்னர் ராகவேந்திர மண்டபத்துக்கு வந்து தன்னைப் பார்க்குமாறு பொறுமையாகக் கூறி அனுப்பினாராம்.
Related Entertainment News:
ஷங்கர் வெளியிட்டுள்ள எந்திரன் புதிய ஸ்டில்கள்!எந்திரன் - வெளிவரா தகவல்கள் - ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு பேட்டி
Endhiran- Movie Gallery