எடிசன் தமிழ் திரைப்பட விருதுகள் 2010 வரும் பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
ஆண்டுதோறும் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் ஒன்று எடிசன் விருது.
7 நாட்டு தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் விருது இது. இவ்விருது தமிழ் திரைப்பட நடிகர்/ நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னனிபாடகர்கள், பாடலாசிரியர்கள்,
சண்டைப்பயிற்சியர்கள், நடன ஆசிரியர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்குனர்கள் மேலும் பல திரைப்பட நட்சத்திரங்கள் என அனைத்து பிரிவினர்க்கும் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
இத்தேர்வு அயல்நாட்டில் உள்ள தமிழ் தொலைகாட்சிகள், வானொலி பன்பலைகள், இணையதளங்கள், எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு செய்து, விருது வழங்கபடுகிறது. இதில் சிறப்பு அம்சமாக அயல்நாட்டு நடிகர், நடிகைகள், தமிழ் திரையுலகின் துணைநடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
இந்நிகழ்ச்சிக்கு அயல்நாடுகளின் தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகிகள்/ தயாரிப்பாளர்கள்/ தொழில் அதிபர்கள்/ அயல்நாட்டு அரசு தூதர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
வரும் பிப்ரவரி 14 ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு சேத்பட் ஹரிங்டன் ரோடில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சத்தியநாரயணன், நரேஷ்பாபு, குமார், குட்டிகுமார் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். இத்தகவலை நிகழ்ச்சியின் தலைமை நிர்வாகி ஜெ செல்வகுமார்.
Related Entertainment News:
கருணாநிதிக்கு 'அமெரிக்க காங்கிரஸ் மகா சபை விருது'விருதுக்குரிய சின்னத் திரைக் கலைஞர்களைத் தேர்வு செய்ய நீதிபதி மருதமுத்து தலைமையில் குழுரஜினி - கமலுக்கு நாளை விருது வழங்குகிறார் முதல்வர்!