Home Tamil News International News நிலநடுக்கத்தால் குலுங்கியது பிலிப்பைன்ஸ்
  

Latest News:

நிலநடுக்கத்தால் குலுங்கியது பிலிப்பைன்ஸ்

July 24, 2010 14:19:59

பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் சுனாமி பீதியால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை 6.08 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மின்டானோ, கொடபாடோ ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டன. அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற பீதியால் வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடு விக்கப்படவில்லை. எனவே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
7.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Related International News:

EarthQuake attack in South American countries
Earthquake Jolts Pakistan - Afghanistan Border
Indonesian Earthquake Creates Chaos