சென்னை: சினிமாவுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்தவர் வீடு இடிந்து நொறுங்கியதில் 9 பேர் காயமடைந்தனர்.
அந்த இடிபாடுகளில் இருந்து ஏராளமான வெடிகுண்டு பொருட்கள் மற்றும் சினிமா துப்பாக்கிகள் ஏராளமாக தோண்டி எடுக்கப்பட்டன.
சென்னை மேற்கு மாம்பலம் காந்தி வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் ரவி (வயது 40). இவர் சினிமா படப்பிடிப்புகளுக்கு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் போன்றவை சப்ளை செய்து வந்தார். இவர் பெயரே பாம் ரவி.
நேற்றிரவு இவரது வீட்டில் சினிமா குண்டு தயாரிக்கும் போது திடீரென்று வெடித்ததில் இவர் வசித்த வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதில் இவர் வசித்த வீடு மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ரவி, அவரது மனைவி ரத்னா, மகன் வருண் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லைசென்ஸ் இல்லாமல்...போலீசார் நடத்திய விசாரணையில் வெடிமருந்து வாங்கி சினிமாவுக்கு தேவையான வெடிகுண்டுகளை தயாரித்து ரவி கொடுத்து வந்தது தெரிய வந்தது.மேலும் இவர் சினிமாவுக்கு தேவையான துப்பாக்கிகளையும் சப்ளை செய்து வந்துள்ளார்.
இவர் முறையாக லைசென்ஸ் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை துணை கமிஷனர் பெரியய்யா மேற்பார்வையில் அசோக் நகர் உதவி கமிஷனர் பரந்தாமன் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு மோப்பநாய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இடிபாடுகளிடையே வெடிமருந்துகள், வெடிக்காத வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த இடிபாடுகளை தோண்டி பார்த்த போது அதில் டிபன்பாக்ஸ் குண்டுகள், தூக்கு குண்டுகள் போன்ற பல்வேறு ரகமான வெடிகுண்டுகள் சினிமாவுக்காக தயாரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த இடிபாடுகளை அகற்றிய போது ஏராளமான நவீன ரக சினிமாவுக்கான துப்பாக்கிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் அங்கேயே ஆய்வு செய்தனர்.
இந்த வெடி விபத்தினால் சேதமடைந்த கட்டிடங்கள் மீண்டும் வசிப்பதற்கு ஏற்றவையா என்று பொதுப்பணித்துறை அலுவலர்களும் ஆய்வு செய்தனர். விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று தெரிகிறது.
Related Tamil Nadu News:
புனேயில் குண்டு வெடித்து 12 பேர் பலி...
40 பேர் படுகாயம்Maoists Bomb School In
Jharkhand Bomb Blast Rocks Peshawar Court