Home Tamil News Entertainment News எல்லா விதமான ரோல்களிலும் நடிக்க சமீரா ரெட்டி ஆசை
  

Latest News:

எல்லா விதமான ரோல்களிலும் நடிக்க சமீரா ரெட்டி ஆசை

July 27, 2010 09:19:25

னைத்து விதமான ரோல்களிலும் நடிக்க விருப்பப்படுவதாக இந்தி நடிகை சமீரா ரெட்டி தெரிவித்தார்.
தமிழில் வாரணம் ஆயிரம், அசல் படத்தில் நடித்தவர் சமீரா. தற்போது கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்து சமீரா கூறியதாவது: நான் கெளதம் மேனனின் ரசிகை. வாரணம் ஆயிரம் படத்தில் எனக்கு சின்ன ரோலாக இருந்தாலும் நிறைய ரசிகர்கள்  கிடைக்கக் காரணமாக இருந்தார். நடுநிசி நாய்கள் படத்தில் இதுவரை பார்த்திராத சமீராவைப் பார்ப்பீர்கள். தியேட்டர்களில் திகில் கொண்டாட்டம் களை கட்டப் போகிறது. வெறுமனே கிளாமர் ரோல்களில் மட்டும் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அனைத்து விதமான ரோல்களையும் செய்து பார்க்கவேண்டும்..
அசல், வாரணம் ஆயிரம் இரண்டும் நல்ல கதைகள். அதற்கு மேல் அஜீத்தும், கெளதம் மேனனும் எனக்குப் பிடித்த ஆட்கள். எனவே அவற்றை உடனே ஒப்புக் கொண்டு நடித்தேன். அதற்காக பிரபலமான இயக்குநர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றில்லை என்றார் சமீரா.

Related Entertainment News:

Sameera Loves To Do More Films In Kollywood
Sameera wish to play with Rajini
Sameera Reddy Chases Gautham Menon In Italy