சென்னை: சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்ததாம். இதில் அவரது மனைவி காயம் அடைந்ததாகவும், இதற்கு ரஜடி
முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவின் போது அஜீத்குமார் பேசிய கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். இதற்கு சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் அஜீத் மீது குற்றம்சாட்டி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீடு நேற்றுமுன்தினம் கல்வீசி தாக்கப்பட்டது. இதற்கு அஜீத்குமாரின் ரசிகர்களே காரணம் என்று கூறி கமிஷனர் அலுவலகத்தில் ஜாக்குவார் தங்கம் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அஜீத்குமாரின் மானேஜர் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் அஜீத்குமாருக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் பற்றி ஜாக்குவார் தங்கம் நேற்று கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை 6 மணியளவில் ரஜினி மற்றும் அஜீத் ரசிகர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஜாக்குவார் தங்கம் வீட்டில் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜாக்குவார் தங்கத்தின் மனைவி சாந்தி காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ஜாக்குவார் தங்கத்தின் ஆதரவாளர்கள் ஏராளமான பேர் அவரது வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தன்னுடைய வீடு கல் வீசி தாக்கப்பட்டது குறித்து ஜாக்குவார் தங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் வீட்டில் இல்லாத நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத்குமார் ரசிகர்கள் என் வீடு மீது கல் வீசி தாக்கியுள்ளனர். வீடு புகுந்து என் மனைவியை தாக்கியிருக்கிறார்கள். இதனால் என் மனைவிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இனிமேலும் இதை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன். நான் என்னுடைய சமுதாயத்துடனும், தமிழ் அமைப்புடனும் சேர்ந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன். எனக்கு தமிழ் அமைப்புகள் ஆதரவு தர வேண்டும். அஜீத் மற்றும் ரஜினிகாந்த் தமிழ் இன துரோகிகள். அவர்களை தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும். அதுவரைக்கும் நான் ஓய மாட்டேன். தமிழர்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அஜீத்குமார் ஒரு மலையாளி. அவருக்கு தமிழ் மக்களை பற்றி என்ன தெரியும்?" என்றார்.
நடிகர் சங்கத்தில் புகார்தான் தாக்கப்பட்டது குறித்து அவர் மனைவி சாந்தி கூறும்போது, "10-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து கல்வீசி தாக்கினர். நான் வெளியே வந்து பார்த்த போது என் கை மீது கல்வீசி தாக்கி விட்டு ஓடி விட்டனர். எனக்கு பயமாக இருக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையே தன்னுடைய வீடு தாக்கப்பட்டது குறித்து ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நேற்று மாலை நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், அஜீத்குமார் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாகவும் ஜாக்குவார் தங்கம் நேற்று இரவு எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரிலும் நடிகர் அஜீத் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்த புகார் மனு மீதும் வழக்குபதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு ஜாக்குவார் தங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, 'அஜீத் மீது வழக்குபதிவு செய்து கண்டிப்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் என்னுடன் செல்போனில் பேசினார். முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார். எனவே உங்கள் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். இப்போது என் வீட்டிற்கு அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
Related TamilNadu News:
அஜீத் மீது சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்
புகார்விழாவுக்கு
வரச்சொல்லி மிரட்டுவதா..
அஜீத் பரபரப்பு பேச்சு.. ரஜினி பாராட்டு!ரஜினி சொன்ன வாசகம்