Home Tamil News Sri Lanka News பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு... உறுதியாகிறது ராஜபக்சே தோல்வி!
Illinois Institute Of Technology
  

Latest News:

பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு... உறுதியாகிறது ராஜபக்சே தோல்வி!

January 25, 2010 10:37:03

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது ஆதரவை எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளார்.


இலங்கை அரசியலில் முக்கிய திருப்பமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
 
நேற்று காலை நிட்டம்புவ கொரஹொல்லயில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு சென்ற சரத் பொன்சேகா, அங்கு பண்டாரநாயக்கவின் சிலைக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தி விட்டு சந்திரிகாவை சந்தித்தார். 

அப்போது நாட்டில் ஊழல் அரசாங்கத்தையும் குடும்ப அரசியலையும் தோற்கடித்து புதிய அரசாங்கத்தை அமைக்க தாம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சிகாரர்கள் தமக்கு கல்லெறியும் போது எதிர்க்கட்சியில் உள்ள ஒருவர் தமது தந்தையின் சமாதிக்கு மலர்தூவியமையை தாம் மெச்சுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் இலியாஸ் தமது போட்டியை விலக்கிக்கொண்டு இன்று சரத் பொன்சேகாவுக்கு தமது ஆதரவை வெளியிட்டார்.

ராஜபக்சே ஏற்கெனவே சந்திரிகாவிடம் ஆதரவு கோரினார். ஆனால் தம்மால் ஆதரிக்க இயலாது என வெளிப்படையாக கூறிவிட்டார் சந்திரிகா. 

ராஜபக்சேயின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்தான் சந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Srilanka News:

Liberations Tigers Are Invited To Join: Sarath Fonseka
Sarath Fonseka Resigns His Post
Raja Pakse Seeks Peace With Sarath Fonseka