Home Tamil News National News ராமலிங்க ராஜூவின் மோசடி மதிப்பு ரூ 14000 கோடி! - சிபிஐ


Illinois Institute Of Technology

Latest News:

ராமலிங்க ராஜூவின் மோசடி மதிப்பு ரூ 14000 கோடி! - சிபிஐ

November 25, 2009 14:57:01


ஹைதராபாத்: ராமலிங்க ராஜூ ரூ.7800 கோடி மோசடி செய்ததாக கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. 

ஆனால் இப்போது மோசடியின் மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அவர் ரூ 14000 கோடி வரை மோசடி செய்துள்ளதாக தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது சிபிஐ.  

ஹைதராபாத் மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் இந்தகுற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. டி.ஐ.ஜி. லட்சுமிநாராயணன் தாக்கல் செய்தார். இந்த குற்றப்பத்திரிகை 200 பக்கங்களை கொண்டது. 

ராமலிங்கராஜூ போலி பத்திரம் மூலம் வங்கியில் ரூ.1220 கோடி கடன் வாங்கியுள்ளார். இதனால் சத்யம் கம்பெனி பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் அவர் ரூ.350 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.  
அவருக்கு சொந்தமாக 6ஆயிரம் ஏக்கர் நிலம், 40ஆயிரம் சதுரஅடி வீட்டுமனை, 90ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் போன்ற 1065 சொத்துக்கள் உள்ளன. இவையும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.