பெங்களூர்: நடிகையுடன் ஆபாச செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் இந்த சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்தியானந்தா விவகாரம் இன்று கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. அவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் ஆச்சார்யா பதிலளிக்கையில், நித்தியானந்த சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அவருடைய தலைமை மடம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. எனவே தமிழகத்திலிருந்து போதிய தகவல்கள் திரட்டப்பட்ட பின்னர் நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும். அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
பெங்களூர் அருகே உள்ள பிடுதியில் நித்தியானந்தாவின் தலைமை தியான பீடம் உள்ளது. அங்கு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இன்று இந்த தியா பீடத்தில், கர்நாடக வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நித்தியானந்தம் முறைகேடாக ஏராளமான சந்தன மரங்களை தனது ஆசிரமத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா பயன்படுத்திய புலித் தோலையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், நித்தியானந்தா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்திலும் வழக்கு...நித்யானந்தம் மீது தமிழகத்திலும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஆர்.சி. மனோகரன் போலீஸ் கமிஷனருக்கு தபால் மூலம் அனுப்பியுள்ள புகாரில்,
"தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று சில வீடியோ காட்சிகளை பார்த்தேன். அவை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. நித்யானந்தாவை பிரபல நடிகை ரஞ்சிதா முத்தமிடுவது போலவும், அவரது கால்களை அமுக்கி பாலியல் உணர்வை தூண்டுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.
பொதுமக்களும், பெண்களும், சிறு வயதினரும் இந்த காட்சிகளை பார்ப்பதால் சமூகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக நித்யானந்தா சாமியை நடிகை ரஞ்சிதாதான் வலுக்கட்டாயமாக இழுப்பது போன்ற காட்சிகள் உள்ளன. எனவே நடிகை ரஞ்சிதா செக்ஸ் உணர்வை தூண்டிய குற்றத்துக்கு ஆளாகிறார்.
இதுகுறித்து ரஞ்சிதா மீது சென்னை போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஞ்சிதா மீதும் நடவடிக்கை-கமிஷனர் உறுதி:இந்த விவகாரம் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ரஜினி, ராம சிவசங்கர், கயல், சிவபெருமாள், லிங்கன் ஆகியோர் நேற்று என்னிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். வக்கீல்களின் புகார் மனு எற்றுக் கொள்ளப்பட்டது. அந்த புகார் மனு அடிப்படையில் சுவாமி நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..." என்றார்.
Related National News:
நித்தியானந்த
சாமி - நடிகை ரஞ்சிதா காம
லீலை வீடியோ பரபரப்பு
நித்தியானந்தர்
ஆசிரமங்கள் சூறை!
நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ... -
நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்!