தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 139 பேர் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் 10 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாநில சட்டசபை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
இந்த கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் தங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
அனைத்து எம்.எல்.ஏ.க்களின் சார்பிலும் முன்னாள் எம்.பி.யும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நாராயணரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனுவை தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனுவை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தது.
Related National News:
தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் - சந்திரசேகரராவ்தெலுங்கானா எம்எல்ஏ- எம்எல்சிக்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தல்!தெலுங்கானா... 13 மந்திரிகள் ராஜினாமா வாபஸ்!