வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தல்களில் வழக்கம்போல திமுக வேட்பாளர்களே முன்னிலை வகித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது.
வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் கமலக் கண்ணன் முன்னிலை வகித்து வருகிறார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் கமலக் கண்ணன் (திமுக) 15115 வாக்குகளும்,அதிமுகவின் முனுசாமி 8792 வாக்குகளும், தேமுதிகவின் ஜனார்தனன்-1562 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருச்செந்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உள்ளார்.
அவர் 21429 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவின் நாராயணன் 9151 வாக்குகளும், தேமுதிகவின் கணேசன் 1468 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
முழுமையான முடிவுகள் தெரிய பிற்பகல் 12 மணியாகும்.
Related Tamil Nadu News:
பென்னாகரம் தொகுதிக்கு ஜன 20-ல் இடைத்தேர்தல்
கூடவே பிறந்த பிரச்சினை! - காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி பேச்சு
ரேஷன் அட்டைகள் 2011 வரை செல்லும்!