அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் (வயது 63) நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பில் கிளிண்டன் தற்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதி தீவின் மறு சீரமைப்பு பணிக்குழுவின் ஐ.நா. தூதராக உள்ளார்.
இந்நிலையில் கிளிண்டனுக்கு திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவரை கொலம்பியா வளாகத்தில் உள்ள நியூயார்க் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை இருதய சிகிச்சை நிபுணர்கள் பரிசோதித்தனர். இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் 2 இடங்களில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர். இதை தொடர்ந்து அவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
Related InterNational News:
Hilary Clinton Accuses Sri Lankan Army Of Rape CrimeBarrack Obama Wins Presidential Elections