Home Tamil News National News 21 குண்டுகள் முழங்க ஜோதிபாசுவுக்கு இறுதி அஞ்சலி


Illinois Institute Of Technology

Latest News:

21 குண்டுகள் முழங்க ஜோதிபாசுவுக்கு இறுதி அஞ்சலி

January 19, 2010 18:08:17

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.


மறைந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலம் இன்று காலை 7.30 மணிக்கு கொல்கத்தாவில் தொடங்கியது. மாலை 3 மணிவரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

வெள்ளை மலர்களாலும், சிவப்புக் கொடியாலும் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில் ஜோதிபாசுவின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஜோதிபாசுவின் உடல், மாநில தலைமைச் செயலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மாநில சட்டப் பேரவையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பபட்டது. அவரது உடலுக்கு, மாலை 3 மணிவரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, ஷேக் ஹசீனா, பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, எஸ்ஆர் பிள்ளை, பிருந்தா காரத், பிமன் போஸ் போன்றவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் தானம் செய்யும் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. வேறு எந்தவிதமான சடங்குகளும் நடைபெறவில்ல. ஜோதிபாசுவின் விருப்பப்படி அவரது கண்கள் ஏற்கெனவே தானம் செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

வேறு எந்த முன்னாள் முதல்வருக்கும் இல்லாத வகையில் 21 குண்டுகள் முழங்க ஜோதிபாசுவுக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.

Related National News:

ஜோதிபாசு காலமானார்
ஜோதிபாசு உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
Health Conditions Critical For KCR