செல்போன்களில் ஆபாசப் படங்களைத் தடை செய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு நேற்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப அதிகாரி பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையை வழங்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்ஷே வலியுறுத்தியதையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான போலீஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் போலீஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை அதிபர் ராஜபக்ஷே அறிவித்திருந்தார். அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான சகலவிதமான துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இலங்கை நாட்டிலிருந்து சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாமல் செய்வதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அதிபர் வலியுறுத்தியிருந்தார்.
செல்போன் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை போலீஸார் நாடியுள்ளனர். இந்த தொலைபேசிகளில் இலவசமாக ஆபாசப் பட இணையத்தளங்களை பார்க்கக் கூடியதாக இருப்பதால் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் இளம் வயதினர் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் விஷயங்கள்அதிகரித்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு போலீஸாருக்கு உதவுவதற்கு செல்போன் தொலைபேசி இயக்குநர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
Related Srilanka News:
Srilankan Tamil Killed in London Mishap - Online Srilankan NewsSrilankan
Refugee ship could be boarded by U.S. or Canada - Tamil News
Kumaran
Padmanathan will be accepted as approver - Srilanka Hot News