Home Tamil News Sports News ஐபிஎல்லுக்கு தடை விதிக்க வேண்டும்! - நிதீஷ் குமார்
Illinois Institute Of Technology
  

Latest News:

ஐபிஎல்லுக்கு தடை விதிக்க வேண்டும்! - நிதீஷ் குமார்

January 22, 2010 12:20:29

பாட்னா: ஐபிஎல் மூலம் கிரிக்கெட்டை முழுக்க முழுக்க வியாபாரமாக்கிவிட்டார்கள்.

எனவே ஐபிஎல்லுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிறார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.

ஐ.பி.எல். போட்டியில் வீரர்கள் ஏலம் நடந்தது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:
 
கிரிக்கெட் நாட்டின் தேசிய அடையாளமாக உள்ளது. ஆனால் இப்போது ஐ.பி.எல். போட்டி மூலம் கிரிக்கெட்டை வியாபார மயமாக்கிவிட்டார்கள். இது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்கத்தை ஏற்படுத்திவிடும்.
 
இந்தியா மற்ற அணிகளை வெல்லும்போது அதை மிகவும் மகிழ்ச்சியோடு எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால் ஐ.பி.எல். போட்டி வேறு மாதிரி எண்ணத்தை உருவாக்குகிறது.
 
இந்தப் போட்டி வியாபாரமாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே ஐபபிஎல்லுக்கு முழுமையான தடையை விதிக்க வேண்டும்", என்று கூறியுள்ளார் நிதீஷ் குமார்.

Related Sports News:

113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
விராட் கோஹ்லி சதம்; வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!
இன்று இந்தியா - இலங்கை மோதல்!