Home Tamil News Entertainment News சம்பள பாக்கியை பெற்றுத் தாருங்கள்: 'ஆயிரத்தில் ஒருவன்' துணை நடிகர்கள் புகார்!
Illinois Institute Of Technology
  

Latest News:

சம்பள பாக்கியை பெற்றுத் தாருங்கள்: 'ஆயிரத்தில் ஒருவன்' துணை நடிகர்கள் புகார்!

January 12, 2010 12:56:20

சென்னை: தங்கள் சம்பள பாக்கி ரூ 7 லட்சத்தை உடனே பெற்றுத் தாருங்கள் என்று ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பணியாற்றிய துணை நடிகர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறியுள்ளனர்.


இந்தப் படத்தில் நடித்த துணை நடிகர்கள், தங்களது சம்பள பாக்கி ரூ 7 லட்சத்தை பெற்றுத் தருமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்துள்ளனர். 

செல்வராகவன் இயக்கியுள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ரீமாசென், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

ஏற்கெனவே வரும் ஜனவரி 20-ம் தேதி வரை இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில், துணை நடிகர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரளாக வந்தனர். கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.
 
அந்த மனுவில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் துணை நடிகர்-நடிகைகள் 100 பேர் நடித்தோம். ஐதராபாத், புதுச்சேரி, குற்றாலம், கோவூர் ஆகிய இடங்களுக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். ஆனால் எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 லட்சம் சம்பள பாக்கி இதுவரை கிடைக்கவில்லை. அந்த சம்பள பாக்கியை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்", என்று கூறியிருந்தனர்.
 
இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ராஜேந்திரன், துணை நடிகர்களிடம் தெரிவித்தார்.  பிறகுதான் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Entertainment News:

பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?
Aayirathil Oruvan Latest Trailer
Aayirathil Oruvan Movie Latest Stills