நடிகர் ஷாரூக்கானின் மும்பை அலுவலகம் மீது சிவசேனா தொண்டர்கள் சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்தினர்.
நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான சினிமா பட அலுவலகம் மும்பை பந்தராவில் உள்ளது. நேற்று சிவசேனா தொண்டர்கள் திரண்டு சென்று மை நேம் இஸ் கான் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஷாருக்கானையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். திடீர் என்று அவர்கள் அலுவலகத்தை தாக்கினார்கள். கூட்டத்தில் இருந்து ஒருவர் ஷாருக்கான் அலுவலகம் மீது சோடா பாட்டில் வீசினர்.
உடனே போலீசார் வந்து அவர்களை விரட்டியடித்தனர். இதில் யாருக்கும் காயம் இல்லை. அலுவலகத்துக்கும் சேதம் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Related National News:
Shahrukh Khan Resents Stepping Into U.S. AgainIndia Agitated On U.S. For Detaining Shahrukh Khan
Deepika Padukone At The Maxim 100 Photo Gallery