இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள் கிடைத்துள்ளன. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காகவும், அந்தப் படத்தில் ரஹ்மானின் சிறந்த இசைக்காகவும் இந்த இரு விருதுகளும் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பாடல் ஜெய் ஹோ மற்றும் இசைக்காக 2 ஆஸ்கர் விருதுகள் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 52வது கிராமி விருதுகளுக்கும் இரு பிரிவுகளில் அவரது பாடல் மற்றும் இசை பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
ஜெய் ஹோ பாடலின் சிறந்த இசைக்காக ஒரு விருதும், அந்தப் பாடலை எழுதிய கவிஞர் குல்சாருடன் இணைந்து மற்றொரு விருதும் அவருக்கு இப்போது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதும் இதே போல குல்சாருடன் இணைந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிராமி விருது வென்ற முதல் தமிழ் இசைக் கலைஞன் ஏஆர் ரஹ்மானுக்கு சிவாஜி டிவி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
Related Entertainment News:
இளையராஜா - ரஹ்மானுக்கு பத்மபூஷன்ஏ.ஆர்.ரகுமானுக்கு சத்யன் விருதுஏ.ஆர்.ரஹ்மானைக் கவுரவித்த பிரிட்டிஷ் கல்லூரி!