ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
அந்தர்வேடி என்னுமிடத்தில் இருந்து பிய்யதிப்பு என்னும் பகுதிக்கு படகு ஒன்றில் சுமார் 80 பேர் பயணம் செய்தனர். கோதாவரி ஆற்றின் உப்படெரு கால்வாய் அருகே திடீரென அந்த படகு மூழ்கியது. இந்நிலையில், அந்த கிராம மக்கள் 44 பேரைக் காப்பாற்றினர்.
இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
அளவுக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்ததால் தான் படகு கவிழ்ந்துள்ளது என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
Related National News:
சுற்றுலா படகு இல்லத்தில் சந்திரகா ஓய்வு
Bihar Flood Gallery Photo Gallery