Home Tamil News Entertainment News அஜீத் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!
  

Latest News:

அஜீத் படத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்!!

February 02, 2010 12:32:25
அசல் படத்தில் அஜீத் சுருட்டுப் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதால், அதை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளார் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். 

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கடும் சட்டமே கொண்டு வந்தார். 

மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும், பசுமைத் தாயகம் எனும் தனது சுற்றுச் சூழல் அமைப்பு மூலம் மது, புகைப்பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து வருகிறார் அன்புமணி.

பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் அருள், துணை செயலாளர் எஸ்.கே.சங்கர் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் சங்கம் தியேட்டர் முன்பு திரண்டனர்.
 
அஜித் கட்-அவுட்டின் மீது புகைபிடிப்பதை தவிர்க்க கோரும் வாசகங்கள் அடங்கிய பேனரை கட்டினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, நடிகர் அஜித், தயாரிப்பாளர் பிரபு, டைரக்டர் சரண் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:
 
அசல் திரைப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருப்பது விளம்பரங்கள் மூலமும், முன்னோட்ட காட்சிகள் மூலமும் தெரியவந்துள்ளது. "புகைபிடித்தல் ஒரு கொடிய உயிர் கொல்லும் பழக்கம்" என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியா முழுவதும் தினமும் 2 ஆயிரத்து 500 பேர் புகையிலை பழக்கத்தால் சாகிறார்கள்.
 
வளர்ந்து, குடும்ப தலைவனாக கடமையாற்ற வேண்டிய தருணத்தில் இளைஞர்கள் நோய் வாய்ப்பட்டு வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இறப்பதால் புதிய வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிகரெட் கம்பெனிகள் தள்ளப்பட்டுள்ளன.

எனவே பல கோடி ரூபாய் செலவிட்டு மறைமுகமாக விளம்பரம் செய்து வருகின்றன. புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு சினிமாக்களில் திணிக்கப்படுகிறது.
 
இளைஞர்களில் 52 சதவீதம் பேர் சினிமாவால் சிகரெட் பிடிக்க தூண்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
 
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், சூர்யா ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை உறுதியாக கொண்டுள்ளார்கள். ஏவி.எம். நிறுவனம் புகை பிடிக்கும் காட்சிகளை தாங்கள் தயாரிக்கும் படங்களில் சேர்ப்பதில்லை என்று அறிவித்துள்ளன.
 
இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி அசல் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளை நீக்குங்கள். ஒருவேளை காட்சியின் முக்கியத்துவம் கருதி நீக்க இயலாது என்று கருதினால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுடன் விளம்பரம் செய்யாதீர்கள். திரையில் சிகரெட் பிடிக்கும் காட்சி வரும்போது, சிகரெட் பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.
 
சிகரெட் நிறுவனங்கள் நுகர்வோரை கொலை செய்யும் தொழில் செய்து வருகின்றன. ஆனால் சினிமா ரசிகர்களை வழி நடத்தும் மிகச்சிறந்த ஊடகம் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Entertainment News:

Thala Ajith Is Back At 'ASAL' Latest Images

Will Fan Politics Affect 'Asal'?
இனி என்னை அல்டிமேட் ஸ்டார் என அழைக்காதீர்கள்! -அஜீத் அதிரடி
Comments
  • Posted by  azeez
    2010-02-07 21:35
    politics should'nt interfer in cinema....???
  • Posted by  velumani
    2010-02-02 01:48
    பெண்கலோடு சுத்துவதும் உயிருக்கு உலை வைக்கும் செயல்தான். அதனால் இனிமேல் யாரும் டூயட் வக்காதீன்கப்பா. பசங்க கெட்டு போயிடுவாங்க. சினிமாவ சினிமாக்காரன் செய்யட்டும் . அரசியல்வதிங்க அரசியல மட்டும் கெடுங்கப்பா. போதும் தாங்க முடியல.