Home Tamil News Entertainment News அசல் படப் பெட்டிக்கு கிடாய் வெட்டி அலப்பறை செய்த அஜீத் ரசிகர்கள்!!


Illinois Institute Of Technology

Latest News:

அசல் படப் பெட்டிக்கு கிடாய் வெட்டி அலப்பறை செய்த அஜீத் ரசிகர்கள்!!

February 06, 2010 15:31:33

நடிகர் அஜித்-சமீரா ரெட்டி, பாவணா நடித்த அசல் திரைப்படம் தமிழகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. இதையொட்டி அஜித் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர் முன்பு குவிந்தனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி பெருக்குடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

 
பொதுவாக தங்களது நடிகர்கள் நடித்த படம் ரிலீசாகும் போது கட்ட வுட்டுக்கு பாலாபிஷேகம், மாலை அணிவது வழக்கம். ஆனால் தற்போது அஜித் ரசிகர்கள் கிடாய் வெட்டி பூஜை செய்து உள்ளனர். இந்த ருசிகர சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் நடந்துள்ளது. 
 
அசல் திரைப்படம் தேவகோட்டையில் உள்ள திருச்சி-ராமேசுவரம் சாலையில் லட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. படம் தொடங்கும் முதல் காட்சிக்கு முன்பாக ரசிகர்கள் திரையரங்கம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். அப்போது அங்கு கிடாய் ஒன்றை இழுத்து வந்து வெட்டி பூஜை செய்தனர்.
 
அதனை தொடர்ந்து கவுன்டரில் டிக்கெட் வழங்கப்பட்டது. இதன் முதல் விற்பனையை நகரசபை துணை தலைவர் பெரி.பாலா தொடங்கி வைத்தார். முதல் டிக்கெட்டை அஜித் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் பெற்றுக் கொண்டார்.
 
நிகழ்ச்சியில் கவுன்சிலர் தமிழரசன், முன்னாள் தி.மு.க. அவைத்தலைவர் பிச்சை மைதீன், ஐகோர்ட்டு வக்கீல் சஞ்சய் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பஸ்கள் மீது கல்வீச்சு

இதற்கிடையே அசல் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் பல ரசிகர்கள் மதுரை காளவாசலில் அரசு பஸ்கள் மீது கல்வீசி சேதம் விளைவித்தனர். 

சென்னை கமலா திரையரங்கம் அருகிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது.

பல தியேட்டர்களின் முன்பு அஜீத் கட்டவுட்டுகளை வைத்து அதற்கு பாலாபிஷோகம், பீரபிஷேகம் செய்து மகிழ்ந்தனர் ரசிகர்கள்!

Related Entertainment News:

'அசல்' அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்

அசல்... விமர்சனம் - பள பள மொந்தையில் பழைய கள்ளு!
எனக்கு அரசியல் வேண்டாம்! - அஜீத் பளீர் பேட்டி
Comments
  • Posted by  Senthil
    2010-02-08 22:26
    சாப்பாட்டுக்கு இல்லாமல் எத்தனையொ பேரு இருக்கும் போது இதெல்லாம் தேவையா? கொஞசம் யோசிங்க‌
  • Posted by  Rajesh
    2010-02-07 21:49
    Evenif we have 1000 Peiyar this Freeking people never change.
  • Posted by  chellam
    2010-02-07 06:38
    தல ரசிகர்கள் NALLAVARGAL APPADI செய்ய மாட்டார்கள்