Home Tamil News Entertainment News நடிகை கனகா மாயம்... திடீர் பரபரப்பு!
  

Latest News:

நடிகை கனகா மாயம்... திடீர் பரபரப்பு!

February 06, 2010 15:20:31


கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகா திடீரென காணாமல் போயுள்ளார். இது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனகாவின் விஷயங்கள் அனைத்தும் மர்மக் கதை போலத் தொடர்கிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முதல் நிலை நாயகியாக இருந்தவர் நடிகை தேவிகா. 

அவரது மகள் கனகா கரகாட்டக்காரனில் நடித்து பெரும் புகழ் பெற்றார். பின்னர் ரஜினி உள்ளிட்ட முதல் நிலை நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் திடீரென்று காணாமல் போனார். இடையில் சில டிவி சீரியல்களில் தலை காட்டினார். அவரது தாயார் தேவிகா மரணத்துக்குப் பின், அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் போனது.

முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கனகா என்று கூறப்பட்டது. 

இந்நிலையில், தனது கணவரைக் காணவில்லை என்றும், சினிமா பைனான்ஸியர் ஒருவர் அவரைக் கடத்திவிட்டதாகவும் கனகா புகார் கூறியிருந்தார். 

அவரை கண்டுபிடித்துத் தருமாறு முதல்வர் கருணாநிதியிடம் முறையிடவும் முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை முதல் கனகாவையும் வீட்டில் காணவில்லை என்று அவரது தந்தை தேவதாஸ் தெரிவித்துள்ளார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கனகாவின் வீட்டுக்கு பத்திரிகையாளர்கள் நேரில் சென்று பார்த்தபோது, வீடு பூட்டிக் கிடந்தது. அங்கே தேவதாஸ் எழுதியிருந்த கடிதம் கிடைத்துள்ளது. அதில் என் மகளைக் காணவில்லை, எங்கே போனார் என்றும் தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். 

கனகாவின் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றபோது பல முறை தொடர்பைத் துண்டித்துவிட்டாராம் கனகா. நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசிய அவர், "என் கணவரை நானே தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டுவிட்டேன். கணவருடன்தான் வீடு திரும்புவேன்" என்று கூறினாராம்.

அவர் எங்கே போயிருக்கிறார், அவர் கணவருக்கு என்ன சிக்கல் என்று யாருக்கும் தெரியவில்லை.

Related Entertainment News:

Asin Missing In Bollywood's Beauty List!
Prabhakaran's Parents Gone Missing
Scientist Missing From Atomic Energy Station