Home Tamil News Sri Lanka News தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை நிறுத்த நடவடிக்கை: ஸ்டாலின்
  

Latest News:

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை நிறுத்த நடவடிக்கை: ஸ்டாலின்

July 16, 2010 10:00:04

லங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். மேலும் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.

Related Srilanka News:

MK Stalin unveil Corporation works next week
MK Stalin gave appointment orders to binders
Tamilnadu Siddha Doctors met MK Stalin