சினிமாவில் அப்துல் கலாம்!
November 26, 2009 10:58:34
மும்பை: 'நான் அபுதுல் கலாம்' என்ற தலைப்பில் உருவாகும் திரைப்படத்தில் தோன்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
'இளஞர்களே கனவு காணுங்கள்' என்று அடிக்கடி கூறும் அவரது பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்கும் இளம் சிறுவன் ஒருவன், அவனது கனவை விவரிக்கும் சினிமாவாக இது தயாராகிறது.
குல்ஷன் குரோவர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
'இந்த சினிமா பற்றி அவருக்கு நன்கு தெரியும். அதன் பின்னரே அவர் தனது சம்மதத்தை தெரிவித்தார்' என்றும் அவர் கூறினார். அவரும் இந்த சினிமாவில் அப்துல் கலாமுடன் நடிக்கிறார்.
ஐ.நா. சபையின் ஒரு அங்கமான 'யுனிசெப்' நிறுவனத்தின் பங்களிப்புடன், இந்தியா-பிரான்ஸ் கூட்டு தயாரிப்பில் இந்த சினிமா உருவாகிறது.
மாதவ் பாண்டா இந்தப் படத்தை இயக்குகிறார்.