Home Tamil News Entertainment News நடிகை கனகா மீது மான நஷ்ட வழக்கு! - ஆவி அமுதா ஆவேசம்
  

Latest News:

நடிகை கனகா மீது மான நஷ்ட வழக்கு! - ஆவி அமுதா ஆவேசம்

February 08, 2010 08:46:10

சென்னை: என்னைப் பற்றி தேவையில்லாமல் பேசி வரும் நடிகை கனகா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று ஆவி அமுதா கூறியுள்ளார்.

தனழது கணவர் காணாமல் போய்விட்டதாக நடிகை கனகா கூறி வருகிறார். தனது கணவர் யார் என ஆவி அமுதாவுக்கு தெரியும், என் கணவர் காணாமல் போனதற்கும், அமுதாவுக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த புகார் பற்றி அமுதா பத்திரிகையாளர்களிடம் கூறியது:

நடிகை கனகா முன்பு ஒரு முறை என்னைப் பார்க்க வந்துள்ளார். ஒரு வாடிக்கையாளராக தான் அவர் எனக்கு தெரியும். அவருக்கு நான் முத்துக்குமார் என்பவரை அறிமுகமும் செய்யவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. யார் யாருடன் நட்புடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியாது.

நடிகை கனகா கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. அவர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது.

2007-ம் ஆண்டு திருமணமானது என்று கூறுகிறார். 2010-ல் கணவர் காணாமல் போய்விட்டார் என்கிறார். அதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்றும் தெரியவில்லை.

கணவரின் போட்டோவை காட்டினாலாவது அவர் யார் என்று தெரிகிறதா பார்க்கலாம் என்றால் போட்டோ எதுவும் இல்லை. பதிவு திருமணம் செய்திருப்பதாக கூறுகிறார். எங்கு பதிவு திருமணம் செய்தார், யார் சாட்சியாக இருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

மான நஷ்ட வழக்கு போடுவேன்!


அவரது எந்த குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நான் சன்மார்க்க பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலராக இருக்கிறேன். தியானம் மற்றும் மன பயிற்சிகள் அளித்து வருகிறேன். இந்த நிலையில் கனகா கூறியுள்ள புகார்களால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.

எனவே அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இதற்காக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்..., என்றார்.

Related Entertainment News:

நடிகை கனகா மாயம்... திடீர் பரபரப்பு!
Asin Missing In Bollywood's Beauty List!
Prabhakaran's Parents Gone Missing