இஸ்தான்புல்: துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குலுங்கின. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பீதி அடங்காமல் நீண்ட நேரம் ரோடுகளில் அமர்ந்திருந்தனர். இதில் சிக்கி 60 பேர் பலியாகினர்.
பூகம்பம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக துருக்கியின் பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் பூகம்பத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. பின்னர் இதில் வீடுகள் இடிந்ததில் 60 பேர் பலியானதாகவும், 100 பேர் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூகம்பம் கடுமையாக இருந்ததால் சாவு எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
Related InterNational News:
Indonesian Earthquake
Creates ChaosEarthquake Jolts Pakistan - Afghanistan
BorderHigh Richter EarthQuakes At Indonesia
And China