Home Tamil News Tamil Nadu News ஐஏஎஸ் தேர்வு... தமிழகத்திலிருந்து 300 பேர் தேர்ச்சி
Illinois Institute Of Technology
  

Latest News:

ஐஏஎஸ் தேர்வு... தமிழகத்திலிருந்து 300 பேர் தேர்ச்சி

March 06, 2010 18:26:25


சென்னை : மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், நாடு முழுவதும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.


மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்திய 2009ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் எழுத்துத் தேர்வுகளில், 13 ஆயிரத்து 837 பேர் தேர்வெழுதினர்; இதில், தமிழகத்திலிருந்து 637 பேர் பங்கேற்றனர். 

இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப் பட்டன. நாடு முழுவதிலுமிருந்து, 2,281 பேரும், தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோரும், நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளில், பணிபுரிய தகுதியுடையவர்கள் ஆவர்.

Related TamilNadu News:

பொதுத் தேர்வுகள்: மார்ச் 1-ல் ப்ளஸ் டூ, 23-ல் எஸ்எஸ்எல்சி
Plus 2 Results Out: Four Toppers This Year
CAT Exams Held Without Hassles On Day Two