இந்த மாதம், அடுத்த மாதம் என தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது 3 ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான தொலைபேசி அலைக்கற்றை ஏலம், மீண்டும் ஒரு முறை தள்ளிப் போடப்பட்டுவிட்டது.
இந்த முறை ஒரேயடியாக அடுத்த நிதியாண்டுக்கு தள்ளி வைத்துள்ளனர் ஏலத்தை. இதனால் அரசுக்கு இந்த நிதியாண்டு வரவேண்டிய ரூ 35000 கோடி வருவாய் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.
பாதுகாப்புத் துறை இன்னமும் எல்லைப் பகுதிகளில் 3 ஜி அலைக் கற்றைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதாலேயே இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.
"எப்படியும் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் இந்தப் பணி முடிந்து விடும் எனத் தெரிகிறது... அதன் பிறகுதான் 3 ஜி ஏலம்" என்கிறார்கள் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்.
இதுகுறித்து இன்னமும் தொலைத் தொடர்புத் துறை மற்றும் நிதித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 3ஜி ஏலத்துக்கு தலைமை வகிப்பவர் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
Related National News:
3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் திட்டமிட்டபடி ஜன 14-ம் தேதி நடக்கும்!