புனே: புனே குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமராவில் முக்கிய துப்பு கிடைத்து இருப்பதாக புனே நகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த சனிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாகி இருந்தனர். 57 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்து புனே நகர ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அபிஷேக் சக்சேனா (வயது 24) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இவர் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். புனேயில் கல்லூரியில் படித்து வந்தார். அவரது உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புனே குண்டு வெடிப்பு தொடர்பாக, 2 பேரை புனே நகர போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துடன் தொடர்புடைய மோஷின் சவுதாரி என்பவனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பில், இந்தியன் முஜாகிதீனின் தொடர்பு குறித்து சந்தேகம் அதிகரித்துள்ளதால், ஏற்கனவே ஜெயிலில் உள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்த மராட்டிய தீவிரவாத தடுப்பு படையினர் முடிவு செய்துள்ளனர்.
அதே சமயத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பிடிபட்டுள்ள டேவிட் கோல்மன் ஹெட்லி, கடந்த ஆண்டு இதே பகுதியில் நடமாடி இருப்பதால், அவனது பங்கு பற்றியும் சந்தேகம் எழுந்துள்ளது.
Related National News:
புனேயில் குண்டு வெடித்து 12 பேர் பலி...
40 பேர் படுகாயம்Condemnation Over Outrage In IBN At
Pune And MumbaiSuicide
Bombers Target Market; 34 Casualties